Shanmugan Murugavel / 2016 மார்ச் 09 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் தர்மசாலாவில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலக இருபதுக்கு-20 தொடரின் போட்டியில் பங்குபற்ற முடியாதென, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அத்தோடு, வேறு மைதானமொன்றை ஒதுக்கித் தருமாறும் அச்சபை கோரியுள்ளது.
இந்தப் போட்டி, மார்ச் 19ஆம் திகதி இடம்பெறத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அப்போட்டியை தர்மசாலாவில் நடத்துவதற்கு ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சரின் விருப்பமின்மை, அங்கு போதிய பாதுகாப்பில்லை என்று அவர் தெரிவித்தமை ஆகியவற்றின் காரணமாக, அது தொடர்பில் ஆராய்வதற்காக, 3 பேர் கொண்ட பாகிஸ்தான் தூதுக்குழுவொன்று அங்கு சென்றது.
அங்கு ஆய்வில் ஈடுபட்ட அவர்கள், அங்கு போதுமான பாதுகாப்புக் காணப்படவில்லை என அறிக்கை சமர்ப்பித்தனர். இதனையடுத்தே, அங்கு விளையாட முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபையைத் தொடர்பு கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, கொல்கத்தா அல்லது மொஹாலியில், அப்போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுள்ளது.
15 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
1 hours ago