Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 150 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே மூன்றாமிடத்திலிருந்தே இரண்டு இடங்கள் முன்னேறியே முதலாமிடத்தை வில்லியம்ஸன் அடைந்துள்ளார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 139 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் அஜின்கியா ரஹானே, 11ஆம் இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில், இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் மிற்செல் ஸ்டார்க், ஏழாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தை அடைந்துள்ளார்.
குறித்த டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியாவின் இரவிச்சந்திரன் அஷ்வின், ஒன்பதாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.
தவிர, 10ஆம் இடத்திலிருந்து ஜஸ்பிரிட் பும்ரா, இந்த டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஓரிடம் முன்னேறி ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026