2025 மே 21, புதன்கிழமை

தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் விராட்?

Editorial   / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்கும்  இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவடைந்த பின்னர், இந்திய அணியின் சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 தலைவர் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலக திட்டமிட்டுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருநாள், டி20 அணிக்கு ரோஹித் சர்மா தலைவராகவும், டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கோலி தலைவராகத் தொடர்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019ஆம்ஆண்டிலிருந்து கோலியின் துடுப்பாட்டம் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. குறிப்பாக கடைசியாக 50 இன்னிங்ஸ்களாக கோலி ஒரு சர்வதேச சதம்கூட அடிக்கவில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தபின் கோலி இதுவரை டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்கவில்லை. உலகத் தரம்வாய்ந்த பேட்ஸ்மேன் கோலியின் துடுப்பாட்டத்துக்கு இதுபோன்ற பின்னடைவுகள், பெரும் அழுத்தத்தை கொடுத்தன.

வெற்றிகரமான தலைவராக கோலி வலம்வந்தாலும், குறிப்பாக ஐசிசி தொடர்பான எந்த முக்கியப் போட்டியிலும் இந்திய அணிக்கு கோலியால் கிண்ணத்தைவென்று கொடுக்க முடியவி்ல்லை. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அணி வீரர்கள் குறித்தும் பிசிசிஐக்கு கோலி மீது கடும் அதிருப்தி இருந்ததாக தகவல்கள் வெளியாயிருந்தன.

இதேவேளை, "இது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. மூன்று வடிவங்களிலும் கோலியே தலைவராகத் தொடர்வார்" என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X