Editorial / 2024 ஜூன் 16 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

15வது சர்வதேச உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்கள் நாடு திரும்பினர்.
இலங்கை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்குப்பற்றி, 06 தங்கப் பதக்கங்கள், 06 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 06 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
உலகின் 12 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்தப் போட்டி தென்னாப்பிரிக்காவின் புளூஃபோன்டைனில் 03 முதல் 13 வரை நடைபெற்றது.
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் புஷ்பகுமார கலந்து கொண்ட போட்டியில் 40க்கு 40 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.
இது தவிர புஷ்பகுமார இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தார். மேலும், கேப்டன் ஹசங்க 02 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.
இது தவிர, 20 வயதுக்குட்பட்ட இலங்கை கனிஷ்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இப்போட்டியில் கலந்து கொண்ட ரோயல் லியனகே 03 தங்கப் பதக்கங்களையும் 02 வெண்கலப் பதக்கங்களையும், ஜெனித் ரத்நாயக்க வெள்ளிப் பதக்கத்தையும் 02 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .