2025 ஜூன் 30, திங்கட்கிழமை

’ துஷலின் ஒப்பந்தம் முறிக்கப்பட்டது’

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனானது, தனது முகாமையாளர் தோமஸ் துஷெல்லின் ஒப்பந்தம் முறிக்கப்பட்டதாக நேற்று  அறிவித்துள்ளது.

இந்நிலையில், துஷெலை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முன்னாள் முகாமையாளரான மெளரிசியோ பொச்செட்டினோ பிரதியிடுவார் என பரிஸ் ஸா ஜெர்மைன் வீரர்கள் அறிந்துள்ளதாக நம்பப்படுகின்றது.

பரிஸ் ஸா ஜெர்மைனுக்கும், பொச்செட்டினோவுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளானது, குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.

ஜேர்மனிய புண்டெஸ்லீகா கழகமான பொரூசியா டொட்டமுண்டின் முன்னாள் முகாமையாளரான துஷெல், கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பரிஸ் ஸா ஜெர்மைனின் முகாமையாளரானதும், இரண்டு லீக் 1 பட்டங்களையும், பிரெஞ்சுக் கிண்ணமொன்றையும், பிரெஞ்சுலீக் கிண்ணமொன்றையும் வென்றிருந்ந்தார்.

தவிர, கடந்த பருவகாலத்தில் முதற்தடவையாக ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டிக்கு பரிஸ் ஸா ஜெர்மைன் தகுதிபெற்றிருந்தது.

இப்பருவகாலத்துடன் துஷெலின் ஒப்பந்தமானது முடிவதாய் இருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X