2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தென்னாபிரிக்கக் குழாமில் பார்னல்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 12 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான தென்னாபிரிக்க குழாமில் வெய்ன் பார்னல் இடம்பெற்றுள்ளார்.

இறுதியாக கடந்த 2017ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்காக விளையாடியிருந்த பார்னல், அதன் பிறகு கொல்பக் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதால் சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை.

இதேவேளை, இத்தொடரில் அணித்தலைவர் தெம்பா பவுமா, குயின்டன் டி கொக், ககிஸோ றபாடா, அன்றிச் நொர்ட்ஜே, றஸி வான் டர் டுஸன், ஏய்டன் மார்க்ரம், வியான் முல்டர், ஹென்றிச் கிளாசென் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அணிக்கு கேஷவ் மஹராஜ் தலைமை தாங்கவுள்ளார்.

இதேவேளை, காயா ஸொன்டோ, டரைன் டுபவில்லன், சிஸன்டா மகலா, ஸுபைர் ஹம்ஸா ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஜூனியர் டலா, பெயுரன் ஹென்ட்றிக்ஸ், ஜோர்ஜ் லின்டி ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.

குழாம்: கேஷவ் மஹராஜ், டரைன் டுபவில்லன், ஸுபைர் ஹம்ஸா, றீஸா ஹென்ட்றிக்ஸ், சிஸன்டா மகலா, ஜனமென் மலன், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, டுவைன் பிறிட்டோறியஸ், அன்டிலி பெக்லுவாயோ, வெய்ன் பார்னல், றயான் றிகெல்டன், தப்ரையாஸ் ஷம்சி, கைல் வெரைன், லிஸார்ட் வில்லியம்ஸ், காயா ஸொன்டோ.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X