2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

தேசிய ஒலிம்பிக் செயற்குழுவின் செயலாளருக்குத் தடை

Shanmugan Murugavel   / 2025 மே 12 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தேசிய ஒலிம்பிக் செயற்குழுவின் முன்னாள் செயலாளர் மக்ஸ்வெல் டி சில்வாவுக்கு ஐந்தாண்டுத் தடையொன்று விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக டி சில்வாவால் புரியப்பட்ட பல்வேறுபட்ட முறைகேடுகள் தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவாலும், விளையாட்டமைச்சாலும் முன்னதாக அவர் இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தேசிய ஒலிம்பிக் செயற்குழுவின் நன்னடத்தை செயற்குழுவால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரையைக் கருத்திற்கொண்டே ஒலிம்பிக் செயற்குழுவின் நிறைவேற்றதிகார செயற்குழு டி சில்வாவுக்கு ஐந்தாண்டுத் தடையை அளித்ததாக செயற்குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே டி சில்வாவின் தடை எழுத்தில் சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக சுப்ரமணியம் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X