J.A. George / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கட் நிறுவனத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மே மாதம் 20ம் திகதி நடத்தப்படவுள்ளது.
இதனை இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், வாக்களிக்க தகுதியான உறுப்பினர்கள் தொடர்பில் சனிக்கிழமை (06) அறிக்கப்படும் என்று கூறியுள்ளது.
பெப்ரவரி 24 ஆம் திகதி காலை 09.30 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலின் போது பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:
தலைவர் - 01 பதவி
துணைத் தலைவர் - 02 பதவிகள்
செயலாளர்- 01 பதவி
உதவி செயலாளர் - 01 பதவி
பொருளாளர்- 01 பதவி
உதவி பொருளாளர் - 01 பதவி
1 hours ago
2 hours ago
7 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago
26 Jan 2026