2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 09 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை பாகிஸ்தான் வென்றிருந்த நிலையில், டாக்காவில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியையும் வென்றமையையடுத்தே 2-0 என தொடரைக் கைப்பற்றியது.

நேற்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தை தமது முதலாவது இனிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 76 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பங்களாதேஷ், உடனேயே எஞ்சிய விக்கெட்டுகளை சஜிட் கான், ஷகீன் ஷா அஃப்ரிடியிடம் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 87 ஓட்டங்களையே பெற்றது. பந்துவீச்சில், சஜிட் கான் 8, ஷகீன் ஷா அஃப்ரிடி 1 விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையில், பொலோ ஒன் முறையில் இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், ஹஸன் அலி, ஷகீன் ஷா அஃப்ரியிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து இணைந்த முஷ்பிக்கூ ரஹீம், லிட்டன் தாஸ் விக்கெட் இழப்புகளைத் தடுத்து ஓட்டங்களைச் சேர்த்த நிலையில், 45 ஓட்டங்களுடன் சஜிட் கானிடம் தாஸ் வீழ்ந்தார். இதையடுத்து ரஹீமுடன் ஜோடி சேர்ந்த ஷகிப் அல் ஹஸன் ஓட்டங்களைச் சேர்த்த நிலையில், 48 ஓட்டங்களுடன் ரஹீம் ரண் அவுட்டானார்.

பின்னர் ஷகிப் அல் ஹஸனுடன் இணைந்து மெஹிடி ஹஸன் மிராஸ், தஜியுல் இஸ்லாம், கலீட் அஹ்மட், எபொடொட் ஹொஸைன் ஆகியோர் குறிப்பிட்ட நேரங்கள் தடுத்தாடியபோதும், அணித்தலைவர் பாபர் அஸாம், சஜிட் கானிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களையே பெற்று இனிங்ஸ் மற்றும் எட்டு ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஷகிப் அல் ஹஸன் 63 ஓட்டங்களைப் பெற்றார். சஜிட் கான் 4, ஹஸன் அலி 2, ஷகீன் ஷா அஃப்ரிடி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக சஜிட் கானும், தொடரின் நாயகனாக அபிட் அலியும் தெரிவாகினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X