Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 04 , பி.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில், தொடர்ந்தும் முதலிடத்தில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி நீடிக்கின்றது.
எவெர்ற்றனின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வணிக்கும் லிவர்பூலுக்குமிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தமையைத் தொடர்ந்தே, இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில், முதலிடத்தில் மன்செஸ்டர் சிற்றி நீடிக்கிறது.
இப்போட்டியில், லிவர்பூலின் நட்சத்திர முன்கள வீரரான மொஹமட் சாலாவின் உதையை, எவெற்றனின் கோல் காப்பாளர் ஜோர்டான் பிக்போர்ட் முதற்பாதியில் அற்புதமாகத் தடுத்ததுடன், அவரின் இறுதிநேர கோல் பெறும் முயற்சியை எவெர்ற்றனின் பின்கள வீரர் மைக்கல் கீன் தடுத்த நிலையில், போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இந்நிலையில், புல்ஹாமின் மைதானத்தில், நேற்று இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது. செல்சி சார்பாக, கொன்ஸலோ ஹியூகைன், ஜோர்ஜின்ஹோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, புல்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை கலும் சம்பர்ஸ் பெற்றிருந்தார்.
இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், மாற்றுவீரரால் பிரதியிடப்படுவதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த செல்சியின் கோல் காப்பாளர் கெபா அரிஸபலகா, கடந்த வார நடுப்பகுதியில் இடம்பெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டியில் விளையாடிய செல்சி அணியில் இடம்பெறாத நிலையில், நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த போட்டியில் விளையாடியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago