Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
J.A. George / 2023 நவம்பர் 15 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகையாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் ஐசிசியால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி 4 மில்லியன் அமெரிக்க டொலரும், தோல்வியடையும் அணி 2 மில்லியன் அமெரிக்க டொலரும் பரிசு தொகையாக வழங்கப்படும்.
அரையிறுதிக்கு சென்ற 4 அணிகளுக்கு தலா 1 லட்சம் டொலர் வழங்கப்படும். லீக் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு 40 ஆயிரம் டொலர் வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா தற்போது அரையிறுதியை எட்டியுள்ளது. லீக்கில் 9 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி, லீக் போட்டியில் வெற்றி பெறும் ஒவ்வொரு போட்டிக்கும் 40 ஆயிரம் டொலரும் அதேபோல அரையிறுதிக்கு சென்றதால் அதற்காக 1 லட்சம் டொலர் பரிசாக வழங்கப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago