Editorial / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}


ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், நடப்பு புண்டெலிஸ்கா சம்பியன்களான பெயார்ண் மியூனிச் தோல்வியடைந்த நிலையில், பொரூசியா டொட்டமுண்ட் வென்றது.
தமது மைதானத்தில் இடம்பெற்ற பொரூசியா மொச்சென்கிளட்பா அணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் பெயார்ண் மியூனிச் தோல்வியடைந்திருந்தது. பொரூசியா மொச்சென்கிளட்பா சார்பாக, அலஸானே பிளியா, லார்ஸ் ஸ்டின்டில், பற்றிக் ஹேர்மன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற எப்.சி அகஸ்பேர்க் அணியுடனான போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் வென்றது. பொரூசியா டொட்டமுண்ட் சார்பாக, பக்கோ அல்கேஸர் மூன்று கோல்களையும் மரியோ கோட்ஸே ஒரு கோலைப் பெற்றதோடு, எப்.சி அகஸ்பேர் சார்பாக, அல்பேர்ட் பின்பொகோஸன், பிலிப் மக்ஸ், மைக்கல் கிரேகொரிட்ச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.
அந்தவகையில், புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் 17 புள்ளிகளைப் பெற்றுள்ள பொரூசியா டொட்டமுண்ட் முதலிடத்தில் காணப்படுகின்ற நிலையில், 13 புள்ளிகளைப் பெற்றுள்ள பெயார்ண் மியூனிச் ஐந்தாமிடத்தில் காணப்படுகின்றது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago