Shanmugan Murugavel / 2016 ஜூன் 23 , மு.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின், இறுதி நாள் குழுநிலைப் போட்டிகளின் முடிவில், போர்த்துக்கல், பெல்ஜியம், ஹங்கேரி, அயர்லாந்து ஆகிய அணிகள், இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
போர்த்துக்கல், ஹங்கேரி அணிகளுக்கிடையிலான போட்டி, 3-3 என்ற கோல்கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டியில் ஹங்கேரி தமது மூன்று கோல்களைப் பெறும்போதும் போர்த்துக்கல் பிந்தங்கிக் காணப்பட்ட நிலையில், ஒரு தடவை பந்துப் பரிமாற்றத்தை வழங்கியும் இரண்டு தடவை கோல்களைப் பெற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியிருந்தார்.
இதேவேளை, ஐஸ்லாந்து, ஒஸ்திரியா அணிகளுக்கிடையே இடம்பெற்ற இக்குழுவின் மற்றைய போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் ஐஸ்லாந்து, வெற்றிபெற்றிருந்தது.
இந்நிலையில், இத்தாலி, அயர்லாந்துக் குடியரசு அணிகளுக்கிடையிலான குழு இ போட்டியொன்றில், 1-0 என்ற கோல்கணக்கில் அயர்லாந்துக் குடியரசு பெற்ற வெற்றிருந்தது.
இதேவேளை, பெல்ஜியம், சுவீடன் ஆகிய அணிகளுக்கிடையிலான மற்றைய போட்டியில் 1-0 என்ற கோல்கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்றதன் மூலம், தொடரிலிருந்து சுவீடன் வெளியேறிருந்தது.
இந்நிலையில், இந்த யூரோ கிண்ண போட்டிகளுடன் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஸல்டான் இப்ராஹிமோவிக் கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில், மேற்படி போட்டியுடன் சுவீடன் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், 2001ஆம் ஆண்டு சுவீடனுக்கான அறிமுகத்தை மேற்கொண்ட இப்ராஹிமோவிக், சுவீடனுக்காக 116 போட்டிகளில் ஆடி, 62 கோல்களுடன் விடை பெற்றார்.
மேற்கூறப்பட்ட போட்டிகளின் முடிவில், குழு எஃப்இல் மூன்றாமிடம் பெற்ற போர்த்துக்கல், தனது இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் குரோஷியாவை சந்திக்கவுள்ளது. தவிர, இக்குழுவில் முதலிடம் பெற்ற ஹங்கேரி, தனது இறுதி 16 அணிகளுக்கான சுற்றில், குழு இஇல் இரண்டாமிடம் பெற்ற பெல்ஜியத்தை சந்திக்கவுள்ளதுடன், இரண்டாமிடம் பெற்ற ஐஸ்லாந்து தனது இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் இங்கிலாந்தைச் சந்திக்கவுள்ளது.
மறுபக்கத்தில், குழு இஇல் மூன்றாமிடம் பெற்ற அயர்லாந்துக் குடியரசு, தனது இறுதி 16 அணிகளுக்கான சுற்று போட்டியில் பிரான்ஸை சந்திக்கவுள்ளது. ஏற்கெனவே இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இத்தாலி, இச்சுற்றில், தற்போதைய யூரோ சம்பியன்களான ஸ்பெயினை சந்திக்கவுள்ளது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago