Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாணயச்சுழற்சியில் தோல்வியடைந்தது தமது அணிக்கு சாதகமானதாக அமைந்ததாக தெரிவித்த றைசிங் பூனே சுப்பர்கையான்ட்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரரான பப் டூ பிளிஸ்ஸிஸ், அதன் காரணமாக வழமைக்கு மாறாக இருந்த மும்பை வான்கடே மைதான ஆடுகளத்தை ஆராய முடிந்ததாக தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை (09) மும்பை இந்தியன்ஸ், றைசிங் பூனே சுப்பர்கையான்ட்ஸ் அணிகளுக்கிடையே இந்தியன் பிறீமியர் லீக் ஆரம்பித்திருந்த நிலையில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியிருந்த நிலையில், ஹர்பஜன் சிங் ஆட்டமிழக்காமல் பெற்ற 45 ஓட்டங்களுடன் 121 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் றைசிங் பூனே சார்பாக இஷாந் ஷர்மா, மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய றைசிங் பூனே அணி, 14.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அஜிங்கியா ரகானே ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்நிலையிலேயே ரகானேயுடன் 78 ஓட்டங்களை ஆரம்ப இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்ட டூ பிளிஸ்ஸிஸ் கருத்து தெரிவிக்கையில், இது, 200 ஓட்டங்களுக்கு மேல் செல்லக்கூடிய ஆடுகளம் என்று அனைவரும் நினைத்ததாகவும் ஆனால் இது அதற்கு முற்றிலும் எதிராக அமைந்ததாகவும் இது மெதுவான ஆடுகளமாக இருந்ததாகவும் தாங்கள் நாணயச்சுழற்சியில் தோல்வியடைந்ததால் எவ்வாறான வேகத்தில் தமது இனிங்ஸை கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
15 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
1 hours ago