2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

நான்காம் சுற்றில் சானியா மிர்ஸா

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 25 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சுற்றுத் தொடரில், பெண்கள் இரட்டையர் போட்டிகளின் நான்காம் சுற்றுக்கு, உலகின் முதல்நிலை ஜோடியான சானியா மிர்ஸா (இந்தியா) - மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிற்ஸர்லாந்து) ஜோடி தெரிவாகியுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்வெட்லானா குஸ்னெட்சோவா, இத்தாலியைச் சேர்ந்த றொபேர்ட்டா வின்சி ஜோடியைத் தோற்கடித்தே, சானியா - ஹிங்கிஸ் ஜோடி, அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றது. 6-1, 6-3 என்ற செட் கணக்கிலேயே, அவ்விருவரும் வெற்றிபெற்றனர்.

ஒற்றையர் போட்டிகளில், ஆண்களின் 2ஆம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரே, அவுஸ்திரேலியாவின் பேர்னாட் தொமிக்கை, 6-4, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, காலிறுதிக்குத் தகுதிபெற்றார். 4ஆம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வவ்றிங்கா, தரவரிசையில் 14ஆம் இடத்திலுள்ள கனடாவின் மிலோஸ் றாவோனிக்கிடம், 3-6, 4-6 , 7-5, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார்.

பெண்களுக்கான போட்டிகளில், 7ஆம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் அஞ்செலிக் கேர்பெர், சக நாட்டு வீராங்கனையான அன்னிக்கா பெக்கை, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டார். 14ஆம் நிலை வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அஸரெங்கா, செக் குடியரசின் பார்போரா ஸ்ட்ரைகோவாவை, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .