Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 23 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில், அடுத்தாண்டு ஜனவரியில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி சார்பாக, மொஹமட் ஆமிரைத் தெரிவுசெய்வதற்கான முடிவை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.
நியூசிலாந்துக்குச் செல்வதற்கான விஸா, ஆமிருக்குக் கிடைக்குமா என்பது தொடர்பில், ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆரம்பித்துள்ள நிலையிலேயே, இந்தச் சந்தேகம் எழுந்துள்ளது.
நியூசிலாந்தின் குடிவரவுக் கொள்கைகளின்படி, குற்றவியல் வழக்குகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்டோருக்கு, விஸா வழங்கப்படுவதில்லை என்பதோடு, அதில், விதிவிலக்குகள் தொடர்பில் ஆராயப்படுவது, தனித்தனியாகவே இடம்பெறும்.
ஸ்பொட் பிக்சிங் குற்றத்துக்காக, 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஆமிருக்கு, இதன் காரணமாக விஸா வழங்கப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே தான், பாகிஸ்தானுக்கான குழாமில் சேர்க்கப்பட்டு, பின்னர் விஸா நிராகரிக்கப்படுவதை விட, அதற்கு முன்பதாகவே விஸா குறித்த ஆலோசனைகளைப் பெறுவதில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஈடுபட்டு வருகிறது.
கடந்தாண்டு இங்கிலாந்துக்குச் செல்வதற்கான விஸா, ஆமிருக்கு மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago