Shanmugan Murugavel / 2016 ஜனவரி 02 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையணி, ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், நியூசிலாந்து அணி, 2-1 என்ற ரீதியில் முன்னிலை வகிக்கின்ற நிலையில், இன்று நான்காவது போட்டி நெல்சனில் இடம்பெற்றது.
மழை காரணமாக, மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேல், இப்போட்டி தாமதமாகவே, அணிக்கு 24 ஓவர் கொண்ட போட்டியாக இப்போட்டி ஆரம்பித்தது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணித் தலைவர் அஞ்செலோ மத்தியூஸ், தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார்.
கடந்த போட்டியில் இலங்கையணி சார்பாக விளையாடிய நுவான் பிரதீப்புக்கு பதில் திஸார பெரேராவும் நியூசிலாந்து அணி சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய டிம் சௌதி, டவ் பிரேஸ்வெல்லுக்கு பதிலாக மற் ஹென்றி, இஷ் சோதி ஆகியோர் இடம்பெற்றனர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 9 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 75 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்ட போது, போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
துடுப்பாட்டத்தில், நியூசிலாந்து அணி சார்பாக மார்ட்டின் கப்தில் 27 ஓட்டங்களையும் ரொஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கையணி சார்பாக நுவான் குலசேகர, திஸார பெரேரா, துஷ்மந்த சமீர ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
இரு அணிகளுக்கிடையிலான இறுதி ஐந்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago