2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

நியூசிலாந்து செல்லமாட்டார் டெரன் லீமன்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 26 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்றுநரான டெரன் லீமன், சப்பல்-ஹட்லி தொடருக்காக, பெப்ரவரியில் இடம்பெறவுள்ள போட்டிகளுக்காக, அவுஸ்திரேலிய அணியுடன் பயணிக்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள குருதிநாளக் கட்டி காரணமாகவே, இந்நிலை ஏற்பட்டுள்ளது.

அவரது நோய், அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான 5ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் முடிவிலேயே கண்டுபிடிக்கப்பட்டதோடு, இரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து அவர் விலகவும் வழிசமைத்தது. ஆனால், நியூசிலாந்துத் தொடருக்காகப் பயணிப்பார் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையிலேயே, அவரது மருத்துவ அறிக்கைகளுக்காகக் காத்திருப்பதாகவும், இதனால், சப்பல்-ஹட்லி தொடருக்காக அவர் நியூசிலாந்து செல்ல மாட்டார் எனவும், ஆனால், டெஸ்ட் தொடருக்காக அவர் செல்லும் வாய்ப்புகளிருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது. டெஸ்ட் தொடருக்காக அவர் செல்வது தொடர்பான இறுதி முடிவு, மருத்துவ ஆலோசனைகளைத் தொடர்ந்தே மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .