2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

நாளை பெண்களுக்கான உலக இருபதுக்கு-20 தொடர் ஆரம்பம்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 14 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆண்களுக்கான உலக இருபதுக்கு-20 தொடரின் சுப்பர் 10 நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், பெண்களுக்கான உலக இருபதுக்கு-20 தொடரும் நாளை ஆரம்பிக்கவுள்ளது.

பெண்களுக்கான தொடரில் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் பங்குபற்றுகின்றன.

நாளை இடம்பெறவுள்ள போட்டியில் இந்திய அணியும் பங்களாதேஷ் அணியும் பெங்களூரில் இடம்பெறவுள்ள போட்டியிலும் இலங்கை அணியும் நியூசிலாந்து அணியும் டெல்லியில் இடம்பெறவுள்ள போட்டியிலும் மோதவுள்ளன. முதலாவது போட்டி மாலை 3.30 மணிக்கும் இரண்டாவது போட்டி இரவு 7.30 மணிக்கும் ஆரம்பிக்கவுள்ளன.

இந்திய அணிக்கு மித்தாலி ராஜும் பங்களாதேஷ் அணிக்கு ஜஹனர அலாமும் இலங்கை அணிக்கு ஷஷிகலா சிரிவர்தனவும் நியூசிலாந்து அணிக்கு சுஸி பேட்ஸ{ம் தலைமை தாங்குகின்றனரென்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .