Editorial / 2026 ஏப்ரல் 02 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

யங் பேர்ட்ஸ் விளையாட்டு கழகத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, முன்னாள் வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வும் ஏழு பேர் கொண்ட மாபெரும் கால்பந்தாட்டத் தொடரும் நுவரெலியாவில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் நேஸ்பி விளையாட்டு கழகம் வெற்றி பெற்று கிண்ணத்தைச் சுவீகரித்தது.
நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் கடந்த 28 மற்றும் 29ஆம் திகதிகளில் இப்போட்டித் தொடர் இடம்பெற்றது. நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 32 அணிகள் இதில் பங்கேற்றன. போட்டிகள் அனைத்தும் வெளியேற்றும் (Knockout) முறையில் நடத்தப்பட்டன.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நேஸ்பி விளையாட்டு கழகமும் கல்வே விளையாட்டு கழகமும் மோதின. இதில் நேஸ்பி அணி 3:0 என்ற கோல் அடிப்படையில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
இப்போட்டித் தொடரின் பரிசளிப்பு விழாவின் போது, யங் பேர்ட்ஸ் விளையாட்டு கழகத்திற்காக விளையாடிய முன்னாள் வீரர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் நுவரெலியா மாநகர சபைத் தலைவர் மஹிந்த தொடம்பலாகே கமகே, முன்னாள் நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத் தலைவரும் யங் பேர்ட்ஸ் கழகத்தின் ஸ்தாபகருமான எல். நேருஜியின் துணைவியார், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜாராம், நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத் தலைவர் எம்.எஸ். லாபீர் மற்றும் நுவரெலியா மாநகர சபையின் பிரதி மேயர் சிவஜோதி யோகராஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
செய்தித் தொகுப்பு: கஜரூபன் திவ்யா










3 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
8 hours ago