2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

நான்காமிடத்துக்கு முன்னேறினார் கோலி

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 24 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் நான்காமிடத்துக்கு இந்தியாவின் அணித்தலைவர் விராட் கோலி முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கெதிரான ஐந்தாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் 80 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே, ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தை கோலி அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. டேவிட் மலன், 2. ஆரோன் பின்ஞ், 3. பாபர் அஸாம், 4. விராட் கோலி, 5. லோகேஷ் ராகுல், 6. றஸி வான் டர் டுஸன், 7. கிளென் மக்ஸ்வெல், 8. மார்டின் கப்தில், 9. டெவோன் கொன்வே, 10. ஹஸரத்துல்லா ஸஸாய்.

இதேவேளை, இந்தியாவுக்கெதிரான நான்காம், ஐந்தாம் போட்டிகளில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இங்கிலாந்தின் சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷீட், ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. தப்ரையாஸ் ஷம்சி, 2. ரஷீட் கான், 3. அஸ்தன் அகர், 4. அடில் ரஷீட், 5. முஜீப் உர் ரஹ்மான், 6. அடம் ஸாம்பா, 7. மிற்செல் சான்ட்னெர், 8. இஷ் சோதி, 9. டிம் செளதி, 10. லக்‌ஷன் சந்தகான்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. மொஹமட் நபி, 2. ஷகிப் அல் ஹஸன், 3. கிளென் மக்ஸ்வெல், 4. றிச்சர்ட் பெரிங்டன், 5. ஷோன் வில்லியம்ஸ்.

இதேவேளை, இந்தியாவுக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 94 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்தின் ஜொனி பெயார்ஸ்டோ, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில், 11ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. விராட் கோலி, 2. பாபர் அஸாம், 3. ரோஹித் ஷர்மா, 4. றொஸ் டெய்லர், 5. ஆரோன் பின்ஞ், 6. பப் டு பிளெஸி, 7. ஜொனி பெயார்ஸ்டோ, 8. டேவிட் வோணர், 9. ஷே ஹோப், 10. கேன் வில்லியம்ஸன்.

இதேவேளை, பங்களாதேஷுகெதிரான முதலிரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நியூசிலாந்தின் மற் ஹென்றி, பந்துவீச்சாளர்களின் தரவரிசையில், 11ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தை அடைந்துள்ளார்.

  1. ட்ரெண்ட் போல்ட், 2. முஜீப் உர் ரஹ்மான், 3. ஜஸ்பிரிட் பும்ரா, 4. மெஹிடி ஹஸன், 5. கிறிஸ் வோக்ஸ், 6. ககிஸோ றபாடா, 7. ஜொஷ் ஹேசில்வூட், 8. மற் ஹென்றி, 9. மொஹமட் ஆமிர், 10. பற் கமின்ஸ்.

இந்நிலையில், இந்தியாவுக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பென் ஸ்டோக்ஸ், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில், நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஷகிப் அல் ஹஸன், 2. மொஹமட் நபி, 3. பென் ஸ்டோக்ஸ், 4. கிறிஸ் வோக்ஸ், 5. இமாட் வசீம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .