2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

நான்காமிடத்துக்கு முன்னேறிய ஜொஷ் ஹேசில்வூட்

Mayu   / 2024 மார்ச் 07 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் நான்காமிடத்துக்கு அவுஸ்திரேலியாவின் ஜொஷ் ஹேசில்வூட் முன்னேறியுள்ளார்.

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.

குறித்த டெஸ்டில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் நேதன் லையன், எட்டாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜஸ்பிரிட் பும்ரா, 2. இரவிச்சந்திரன் அஷ்வின், 3. ககிஸோ றபாடா, 4. ஜொஷ் ஹேசில்வூட், 5. பற் கமின்ஸ், 6. நேதன் லையன், 7. இரவீந்திர ஜடேஜா, 8. பிரபாத் ஜெயசூரிய, 9. ஜேம்ஸ் அன்டர்சன், 10. கைல் ஜேமிஸன்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. கேன் வில்லியம்சன், 2. ஜோ றூட், 3. ஸ்டீவ் ஸ்மித், 4. டரைல் மிற்செல், 5. பாபர் அஸாம், 6. உஸ்மான் கவாஜா, 7. திமுத் கருணாரத்ன, 8. விராட் கோலி, 9. ஹரி ப்ரூக், 10. யஷஸ்வி ஜைஸ்வால்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. இரவீந்திர ஜடேஜா, 2. இரவிச்சந்திரன் அஷ்வின், 3. ஷகிப் அல் ஹஸன், 4. ஜோ றூட், 5. அக்ஸர் பட்டேல்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X