Editorial / 2020 செப்டெம்பர் 18 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் தொடரானது நாளை ஆரம்பிக்கின்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் இலங்கை நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள நடப்புச் சம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியுடனேயே இத்தொடர் ஆரம்பிக்கவுள்ளது.
அபுதாபி, டுபாய், சார்ஜா என மூன்று மைதானங்களிலேயே இம்முறை தொடர் இடம்பெறவுள்ளதுடன், இவ்வாண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
கொவிட்-19-க்கு மத்தியில் இத்தொடர் இடம்பெறுகின்ற நிலையில் பலத்த கட்டுப்பாடுகள், வெளியுலகத்தோடு தொடர்பில்லாமல் இருத்தல் என்பன காணப்படுகின்ற நிலையில் வீரர்களின் பெறுபேறுகளை விட அவர்களை மனதளவில் தயார்படுத்தலே அணிகளுக்கு பெரிய சவாலாக விளங்கப் போகின்றது.
சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்கள் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே தொடரிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
27 Jan 2026