Shanmugan Murugavel / 2025 மே 12 , பி.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது.
நியூகாசில் சார்பாக சன்ட்ரோ டொனாலி, ப்ரூனோ குய்மரஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை சம்பியனாகியுள்ள லிவர்பூலின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் சமப்படுத்தியது. ஆர்சனல் சார்பாக கப்ரியல் மார்டினெல்லி, மிகேல் மெரினோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லிவர்பூல் சார்பாக கோடி கக்போ, லூயிஸ் டியஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற கிறிஸ்டல் பலஸுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.
இந்நிலையில் நொட்டிங்ஹாம் பொரெஸ்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி சமப்படுத்தியது.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 83 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் சம்பியனாகியுள்ள லிவர்பூல் காணப்படுகின்றது. 68 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்சனலும், 66 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நியூகாசிலும், 65 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் மன்செஸ்டர் சிற்றி காணப்படுகின்றது.
39 minute ago
8 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
8 hours ago
27 Mar 2026