2025 ஜூலை 30, புதன்கிழமை

நியூசிலாந்தின் வெற்றிக்கு 280 ஓட்டங்கள் தேவை

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 28 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெற்றி பெறுவதற்கு 280 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில், கான்பூரில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, டிம் செளதி 5, கைல் ஜேமிஸன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தபோதும் ஷ்ரேயாஸ் ஐயரின் 105, ஷுப்மன் கில்லின் 52, இரவீந்திர ஜடேஜாவின் 50, இரவிச்சந்திரன் அஷ்வினின் 38 ஓட்டங்களோடு தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 345 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, டொம் லேதமின் 95, வில் யங்கின் 89 ஓட்டங்களுக்கு மத்தியிலும், அக்ஸர் பட்டேல் 5, அஷ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, செளதி, ஜேமிஸனிடம் தலா 3 விக்கெட்டுகளை இழந்தபோதும், ஐயரின் 65, ரித்திமான் சஹாவின் ஆட்டமிழக்காத 61, அஷ்வினின் 32, பட்டேலின் ஆட்டமிழக்காத 28 ஓட்டங்களோடு 7 விக்கெட்டுகளை இழந்து 234 ஓட்டங்களைப் பெற்றபோது தமது இனிங்ஸை இடைநிறுத்தியது.

இந்நிலையில், 284 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடி வருகின்ற நியூசிலாந்து, இன்றைய நான்காம் நாள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து நான்கு  ஓட்டங்களைப் பெற்றுள்ளது. வீழ்த்தப்பட்ட விக்கெட்டை அஷ்வின் கைப்பற்றினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .