Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 18 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, ஒக்லன்டில் இலங்கை நேரப்படி இன்று காலை 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகின்றது.
பெருவிரலில் ஏற்பட்ட முறிவு காரணமாக இத்தொடரை பாகிஸ்தானின் அணித்தலைவர் பாபர் அஸாம் தவறவிடுகின்ற நிலையில், பாரிய பின்னடைவை அவ்வணி எதிர்நோக்கியுள்ளது.
பாபர் அஸாமை மய்யப்படுத்தியே பாகிஸ்தானின் அனைத்துத் திட்டங்களும் காணப்பட்ட நிலையில், தற்போது அவரில்லாத நிலையில் ஒவ்வொரு போட்டியிலும் பொறுப்பான நிலையான இனிங்ஸை சிரேஷ்ட வீரர் மொஹமட் ஹபீஸ் ஆட வேண்டியுள்ளது.
இந்நிலையில், ஹைதர் அலி, குஷ்டில் ஷா, அப்துல்லா ஷஃபிக் போன்ற இளம் துடுப்பாட்டவீரர்களுக்கு இத்தொடர் வாய்ப்பாகக் காணப்படுகின்றது.
மறுபக்கமாக முதலாவது குழந்தையை எதிர்பார்த்துள்ள நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் மற்றும் டிம் செளதி, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் முதலாவது போட்டியை தவறவிடுகின்றபோதும், கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், டெவோன் கொன்வே, ஸ்கொட் குக்லஜின், இஷ் சோதி, மிற்செல் சான்ட்னெர் என பலமானதாகவே நியூசிலாந்து காணப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
48 minute ago
57 minute ago