2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் பின்தங்கியுள்ள இலங்கை

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 19 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை பின்தங்கியுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், வெலிங்டனில் நேற்று முன்தினம் ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து, கேன் வில்லியம்ஸனின் 215, ஹென்றி நிக்கொல்ஸின் ஆட்டமிழக்காமல் 200, டெவொன் கொன்வேயின் 78 ஓட்டங்களோடு தமது முதலாவது இனிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 580 ஓட்டங்களைப் பெற்றபோது தமது இனிங்ஸை இடைநிறுத்தியது. பந்துவீச்சில், கசுன் ராஜித 2, தனஞ்சய டி சில்வா, பிரபாத் ஜெயசூரிய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, மற் ஹென்றி (3), டஃப் பிறேஸ்வெல், அணித்தலைவர் டிம் செளதி, மிஷெல் பிறேஸ்வெல் (3), பிளையர் டிக்னரிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 89, தினேஷ் சந்திமால் 37 ஓட்டங்களைப் பெற்றனர்.

தொடர்ந்து பொலோ ஒன் முறையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை, இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில் குசல் மென்டிஸ் 50 ஓட்டங்களுடனும், அஞ்சலோ மத்தியூஸ் ஓர் ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர். முன்னதாக 51 ஓட்டங்களுடன் கருணாரத்ன ஆட்டமிழந்தார். செளதி, டஃப் பிறேஸ்வெல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .