2026 மே 06, புதன்கிழமை

பி.எஸ்.எல்: சம்பியனான பெஷாவர் ஸல்மி

Shanmugan Murugavel   / 2026 மே 04 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் (பி.எஸ்.எல்) பெஷாவர் ஸல்மி சம்பியனானது.

லாகூரில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹைதரபாத் கிங்ஸ்மனை வென்றே இரண்டாவது தடவையாக ஸல்மி சம்பியனானது.

முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட கிங்ஸ்மன், மொஹமட் பஸிட், ஆரோன் ஹாடி (4), சுஃபியான் மொகிம், நஹிட் ரானாவிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் சைம் அயூப் 54 (50) ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு 130 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஸல்மி, ஆரம்பத்தில் மொஹமட் ஹரிஸ், அணித்தலைவர் பாபர் அஸாம், குசல் மென்டிஸ், மிஷெல் பிறேஸ்வெல்லை ஆரம்பத்திலே மொஹமட் அலி (2), ஹுனைன் ஷா, ஆகிஃப் ஜாவீட்டிடம் பறிகொடுத்து தடுமாறியது.

பின்னர் ஹாடியின் ஆட்டமிழக்காத 56 (39), அப்துல் சமட்டின் 48 (34) ஓட்டங்களோடு 15.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்து ஸல்மி சம்பியனானது.

இப்போட்டியின் நாயகனாக ஹாடியும் தொடரின் நாயகனாக மொகிமும் தெரிவாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .