2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பாகிஸ்தானுக்கெதிரான நியூசிலாந்துக் குழாம் அறிவிப்பு

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 11 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கவுள்ள நியூசிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, 13 பேர் கொண்ட குழாமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழாமில், புறச் சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரரான டொட் அஸ்டில் இடம்பெற்றுள்ள நிலையில், இலங்கைக்கெதிரான மட்டுபடுத்தப்பட்ட  ஓவர்கள் கொண்ட தொடரில் பங்கேற்ற புறச் சுழற்பந்துவீச்சாளரான இஷ் சோதி, இக்குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.

தவிர, முதலாவது போட்டியில் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் ரொஸ் டெய்லருக்கு ஓய்வளிக்கப்படவுள்ள நிலையில், இப்போட்டிக்காக மட்டும் டொம் லதாம் இணைக்கப்பட்டுள்ளார். எனினும் தொடரின் 2ஆவது, 3ஆவது போட்டிகளில் டெய்லர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடனான, இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நியூசிலாந்து அணியிலிருந்து மேற்படி இரண்டு மாற்றங்கள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. நதன் மக்கலம், டிம் சௌதி ஆகியோர் தொடர்ந்தும் காயத்திலிருந்து குணமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இத்தொடரின் முதலாவது போட்டி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) இடம்பெறவுள்ளது.

குழாம்: கேன் வில்லியம்ஸன் (தலைவர்), கொரே அன்டர்சன், டொட் அஸ்டில், ட்ரெண்ட் போல்ட், கிரான்ட் எலியற், மார்ட்டின் கப்தில், மற் ஹென்றி, மிட்செல் மக்கெலநகன், அடம் மில்ன், கொலின் முன்றோ, லுக் ரோங்கி, மிட்செல் சான்ட்னர், ரொஸ் டெய்லர், டொம் லதாம் (முதலாவது போட்டிக்கு மட்டும்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .