Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 05 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளின் தலைவராக, விக்கெட் காப்பாளரான சப்ராஸ் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வணியின் தலைவராக இருந்த ஷகிட் அப்ரிடி, அப்பதவியிலிருந்து விலகியமையைத் தொடர்ந்து ஏற்பட்ட இடைவெளிக்கே, சப்ராஸ் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக இருபதுக்கு-20 தொடரில் ஷகிட் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி, மோசமான பெறுபேற்றை வெளிப்படுத்தியதோடு, அப்ரிடியின் தலைமைத்துவம் தொடர்பாகவும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. சில நாட்டிகளின் பின்னர், தனது பதவியிலிருந்து விலகுவதாக, அப்ரிடி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சப்ராஸ் அஹமட்டுடன் நேற்றுக் காலை தொலைபேசியில் உரையாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷகாரியார் கான், அணித்தலைமைப் பதவி குறித்து அவரிடம் தெரிவித்தார்.
இதேவேளை, பாகிஸ்தான் அணியின் பயிற்றுநரான வக்கார் யுனிஸ், தனது பதவியிலிருந்து நேற்றிரவு விலகியிருந்த நிலையில், புதிய பயிற்றுநரைத் தேடுவதற்காக, பாகிஸ்தானின் முன்னாள் தலைவராக வசிம் அக்ரம், முன்னாள் வீரரான ரமீஸ் ராஜா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், பாகிஸ்தானின் தேர்வுக்குழுவும் முழுமையாகக் கலைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தேர்வாளர்களைத் தேடும் பணியும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்குச் சென்றுள்ளது. புதிய தேர்வாளர்கள் விவரமும் விரைவில் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
11 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
40 minute ago
1 hours ago