2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

பாகிஸ்தானின் துடுப்பாட்டமே சொதப்பியது: வக்கார்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 03 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெற்ற முக்கியமான ஆசியக் கிண்ணப் போட்டியில் தோல்வியடைந்து, இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான் அணி, துடுப்பாட்டத்திலேயே தவறுகளை விட்டதாக, அவ்வணியின் பயிற்றுநர் வக்கார் யுனிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 8.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 28 ஓட்டங்களுடன் தடுமாறியதோடு, இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷ் அணி, 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்திருந்தது.

இந்த வெற்றியுடன், பங்களாதேஷ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றதுடன், இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் இலங்கை, பாகிஸ்தான் அணிகளின் வாய்ப்புகளையும் இல்லாது செய்தது.

பாகிஸ்தான் அணியின் முன்னிலைத் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறும் போது, அது பிரச்சினையாக அமையுமெனத் தெரிவித்த வக்கார் யுனிஸ், பந்துவீச்சாளர்களில் தவறுகூற முடியாது எனத் தெரிவித்தார்.

'பந்துவீச்சாளர்ளுக்கு ஆடுகளங்கள் சிறிது உதவுகின்றன. அது, துடுப்பாட்ட வீரர்களைப் பாதித்திருப்பதாக நான் நினைக்கிறேன். ஏனைய போட்டிகளை நீங்கள் பார்த்தாலும், முதல் 6 ஓவர்களில் எல்லா அணிகளும், இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளன. மலிக் சிறப்பாக விளையாடினார். சப்ராஸ் சிறப்பாக விளையாடினார். ஆனால், ஒட்டுமொத்தமாக, துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி தவறிழைத்தது" என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .