Shanmugan Murugavel / 2016 மார்ச் 08 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையுடன் துணையுடன் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகளின் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவுள்ளதாக, சிரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.எனினும், இப்பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதாக இல்லையா என்பது குறித்து, சிரிய எதிரணிகள், இன்னமும் ஆராய்ந்து வருகின்றன.
கடந்த மாதம் முறிவடைந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், இம்மாதம் 14ஆம் திகதியன்று மீண்டும் ஆரம்பிக்கவுள்ளன. இப்பேச்சுவார்த்தைகள், ஜெனீவாவில் இடம்பெறவுள்ளன.
பேச்சுவார்த்தை முறிவடைந்திருந்த காலப்பகுதியில், ரஷ்யாவாலும் ஐக்கிய அமெரிக்காவாலும் கொண்டுவரப்பட்ட மோதல் தவிர்ப்பு நடைமுறையில் உள்ளதோடு, அதன்காரணமாக உயிரிழப்புகள் குறைவடைந்துள்ள நிலையில், அந்த மோதல் தவிர்ப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து, அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
எனினும், மோதல் தவிர்ப்புக் காலத்திலும் தங்கள் மீது, ரஷ்யாவாலும் சிரிய அரசாங்கத்தாலும் தாக்குதல் நடத்தப்படுவதாக எதிரணிகள் குற்றஞ்சாட்டிவரும் நிலையில், இப்பேச்சுவார்த்தைகளில் எதிரணிகள் பங்குபெறுவது முக்கியமானது எனக் கருதப்படுகிறது.
16 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
1 hours ago