Shanmugan Murugavel / 2015 நவம்பர் 05 , மு.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்று வரும் சம்பியன்ஸ் லீக் தொடரின் குழு நிலை ஆட்டங்களில் பெயார்ண் முனிச், பார்சிலோனா, செல்சி ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இவ்வணிகள், முறையே ஆர்சனல், பேட் பொரிசோவ், டைனமோ கீவ் ஆகிய அணிகளையே வெற்றி கொண்டுள்ளன.
பெயார்ண் முனிச், ஆர்சனல் அணிகளிடையே இடம்பெற்ற குழு எஃப் போட்டியில் பெயார்ண் முனிச் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் பெயார்ண் முனிச் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது கிட்டத்தட்ட உறுதாகியுள்ளதுடன், ஆர்சனல் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு சிக்கலான நிலைமையை எதிர்நோக்கியுள்ளது.
அடுத்து தற்போதைய சம்பியன்களான பார்சிலோனா அணி, 3-0 என்ற கோல் கணக்கில் பேட் பொரிசோவ் அணியைத் தோற்கடித்து, விலகல் முறை சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான தனது வாய்ப்புக்களை மேலும் பலப்படுத்திக்கொண்டுள்ளது.
இதேவேளை, தொடர்ந்து தடுமாறி வரும் செல்சி அணிக்கு ஆறுதலளிக்கும் முகமாக, 2-1 என்ற ரீதியில் டைனமோ கீவ் அணியுடனான வெற்றி அமைந்தது. இந்த வெற்றியுடன் செல்சி அணி, குழு ஜியில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago