2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பார்சிலோனா ஒப்பந்தத்தை இழந்தார் சேர்ஜி

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெய்னைச் சேர்ந்த மத்தியகள வீரரான சேர்ஜி குவார்டியாலோ, பார்சிலோனா கழகத்தின் 'பி" அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது ஒப்பந்தத்தை நீக்குவததாக, பார்சிலோனா அறிவித்துள்ளது.

24 வயதான சேர்ஜி, பார்சிலோனா கழகத்தின் மீதும், ஸ்பெய்னின் உள்;ர்ச் சமூகமான கட்டலோனியா மீதும், பதிவு செய்திருந்த டுவீட்கள் காரணமாகவே, அவரது ஒப்பந்தம், நீக்கப்பட்டுள்ளது.

குறித்த சமூகத்தைப் பற்றியகடும் வார்த்தைப் பிரயோகங்களுடன் கூடிய கருத்துக்களைப் பகிர்ந்திருந்த அவர், பார்சிலோனாவின் பரம வைரிகளான றியல் மட்ரிட் கழகத்துக்கும் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த டுவீட்கள், 2013ஆம் ஆண்டில் பதியப்பட்டன என்ற போதிலும், டுவிட்டர் பயனொருவரால் இவை வெளிப்படுத்தப்பட்டதையடுத்தே, அவரது ஒப்பந்தம் நீக்கப்பட்டது.

நிலைமைப் புரிந்து கொள்வதாகத் தெரிவித்துள்ள சேர்ஜி, அந்த டுவீட்களை, தானே பதியவில்லை எனவும், அச்சமூகத்தினருக்கெதிரான கருத்துக்களைத் தான் கொண்டிருக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .