2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

பார்சிலோனாவின் தொடர் வெற்றிக்கு றியல் மட்ரிட் முற்றுப்புள்ளி

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் லா லிகா தொடரில், பரம வைரிகளான றியல் மட்ரிட்டும் பார்சிலோனாவும் மோதும் இப்பருவகாலத்தின் இரண்டாவது எல்-கிளாசிகோ கடந்த சனிக்கிழமை (02) பார்சிலோனா மைதானத்தில் இடம்பெற்றது.

றியல் மட்ரிட் கழக மைதானத்தில் இடம்பெற்ற இப்பருவகாலத்தின் முதலாவது எல்-கிளாசிகோவில் 4-0 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா வெற்றி பெற்றதுடன் இம்முறையும் இலகுவாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், போட்டியின் இறுதிக் கணங்களில் 10 பேருடன் விளையாடிய றியல் மட்ரிட்டுக்கு போட்டியின் 85ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அபார கோல் கைகொடுக்க அவ்வணி 2-1 என்ற கோல்கணக்கில் வென்று பார்சிலோனாவின் 39 தொடர் வெற்றிகளுக்கு றியல் மட்ரிட் முற்றுப்புள்ளி வைத்தது.

இப்போட்டியில் றியல் மட்ரிட்டின் நடுக்களத்தில் சிறப்பாகச் செயற்பட்ட கஸ்மெய்ரோ, பார்சிலோனாவின் மும்மூர்த்திகளான நேமர், லூயிஸ் சுவரேஸ், லியனல் மெஸ்ஸி ஆகியோர் தமது வழமையான ஆட்டத்தை முன்னெடுக்காத வகையில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தார். பார்சிலோனா சார்பாக பெறப்பட்ட கோலை போட்டியின் 55ஆவது நிமிடத்தில் அவ்வணியின் பின்களவீரரான ஜெராட் பிகேயே பெற்றிருந்தார்.

றியல் மட்ரிட் சார்பாக இப்போட்டியில் பெறப்பட்ட மற்றைய கோலை, முதற்பாதியில் ஏமாற்றமளித்த கரிம் பென்ஸீமா போட்டியின் 62ஆவது நிமிடத்தில் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .