Shanmugan Murugavel / 2016 மார்ச் 07 , மு.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகாத் தொடரின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்ற போட்டியில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றுள்ளது.
பார்சிலோனா அணிக்கும் ஐபார் அணிக்குமிடையிலான போட்டியில், 4-0 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது. இதில், போட்டியின் எட்டாவது நிமிடாத்தில் முனிர் எல் ஹட்டாடியும் 41ஆவது நிமிடத்திலும் 76 நிமிடத்தில் கிடைத்த பெனால்டி மூலம் லயனல் மெஸ்ஸியும் 84ஆவது நிமிடத்தில் லூயிஸ் சுவரேஸூம் கோல்களைப் பெற்றனர்.
இப்போட்டியில் பெற்ற வெற்றி மூலம் 72 புள்ளிகளைப் பெற்றுள்ள பார்சிலோனா, லா லிகா புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்திலுள்ள அத்லெட்டிகோ மட்ரிட்டை விட எட்டு புள்ளிகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. மூன்றாமிடத்தில் 60 புள்ளிகளுடன் றியல் மட்ரிட் காணப்படுகின்றது.
இதேவேளை, இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் தொடர்ச்சியாக 36 போட்டிகளில் பார்சிலோனா தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
14 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
1 hours ago