2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பிராவோவுக்கு எச்சரிக்கை

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 17 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடிவரும் டுவைன் பிராவோ, நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டமைக்காக, உத்தியோகபூர்வமாக எச்சரிக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக, வன்கெடே மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்தே இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டது.

ஜஸ்பிறிட் பூம்ராவின் பந்துவீச்சை அடித்தாட முயன்ற டுவைன் பிராவோ, ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது. எனினும், அவர் ஆட்டமிழந்திருக்கவில்லையென்பது தெரிந்தது. இதன்போதே பிராவோ, அந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.

இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றநிலையில், பதிலளித்தாடிய குஜராத் லயன்ஸ் அணி, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஆரொன் பின்ச்சின் சிறப்பான துடுப்பாட்டத்தின் காரணமாக, இறுதிப் பந்தில் வெற்றிபெற்றது. பின்தொடைத் தசைநார் உபாதை காரணமாகத் தடுமாறிய பின்ச், 54 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பெற்றதோடு, இறுதிப்பந்தில் ஓர் ஓட்டம் தேவைப்பட்ட நிலையில், 4 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் சண்றைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குமிடையிலான போட்டியில், சண்றைசர்ஸ் அணி 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், கௌதம் கம்பீர் 60 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களைப் பெற, கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .