Shanmugan Murugavel / 2016 ஜூன் 21 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸில் தேசிய கால்பந்தாட்ட அணியின் முகாமையாளராக, பிரேஸில் கழகமான கொரிந்தியன்ஸ் கால்பந்தாட்ட அணியின் முன்னாள் முகாமையாளரான டைட், உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் முகாமையாளராகக் காணப்பட்ட துங்கா, கோப்பா அமெரிக்கா தொடரில் பிரேஸில் அணி குழு நிலைப் போட்டிகளிலிருந்து வெளியேறியதையடுத்து அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய முகாமையாளராக டைட் வருவார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே, தற்போது அவரது நியமனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், றியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பின்னரே தனது பதவியை அவர் ஏற்றுக் கொள்வார் என அறிவிக்கப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிகளின் போது, தேசிய 20 வயதுக்குட்பட்ட அணியின் முகாமையாளரான மைக்கலே, முகாமையாளராகச் செயற்படவுள்ளார்.
58 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
7 hours ago