Shanmugan Murugavel / 2016 மார்ச் 28 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸ் உள்ளூர் கால்பந்தாட்டக் கழக சம்பியனான பரிஸ் செய்ண்ட்-ஜெர்மைன் கழகத்திலிருந்து தன்னை ஒப்பந்தம் செய்து கொள்ள பிறீமியர் லீக் கழகங்கள் ஆர்வமாய் இருப்பதாக சுவீடன் நாட்டின் தேசிய கால்பந்தாட்ட அணியின் நட்சத்திரவீரர் ஸல்டான் இப்ராஹிமோவிக் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்துடன் பரிஸ் செய்ண்ட்-ஜெர்மைன் அணியுடான ஒப்பந்தம் முடிவடைகின்ற முப்பத்து நான்கு வயதான ஸல்டான் இப்ராஹிமோவிக்கை மன்செஸ்டர் யுனைட்டெட், செல்சி, ஆர்சனல் ஆகிய இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்கள் ஒப்பந்தம் செய்ய ஆர்வமாகவுள்ளன என்று கூறப்படுகிறது.
இந்நிலையிலேயே, அங்கு விருப்பம் காணப்படுகிறது. இது எங்கே இட்டுச் செல்கின்றது எனப் பார்ப்போம் என்று தெரிவித்த ஸல்டான் இப்ராஹிமோவிக், இது திருமணம் போன்றே இருக்க வேண்டும், இரண்டு தரப்புக்களும் அதேயளவு விருப்பத்தை கொண்டிருக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
111 சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றிய ஸல்டான் இப்ராஹிமோவிக் 62 கோல்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
17 minute ago
23 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
23 minute ago
1 hours ago