Shanmugan Murugavel / 2016 ஜூன் 29 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
குறுந்தூர ஓட்டப் போட்டிகளின் நாயகனும் உலக சாதனையாளருமான உசைன் போல்ட், இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தகுதிபெறுவதற்கான போட்டிகளில், நாளை பங்குபற்றவுள்ளார்.
2008ஆம், 2012ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டம், 200 மீற்றர் ஓட்டம், 4*100 மீற்றர் அஞ்சலோட்டம் ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களைப் பெற்ற போல்ட், இம்முறை இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளிலும் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாகவும் மூன்று தங்கங்களையும் வெல்ல எதிர்பார்க்கிறார்.
29 வயதான உசைன் போல்ட், இப்பருவகாலத்தில் 100 மீற்றர்களை 9.88 செக்கன்களில் ஓடி, சிறந்த போர்மில் காணப்படுகிறார். பிரான்ஸின் ஜிம்மி விகௌட் மாத்திரமே (9.86 செக்கன்கள்), அதிக வேகமாக ஓடியவராக உள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளுக்கான விதிகளின்படி, கடந்த காலங்களில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியோர், நேரடியாகத் தகுதிபெற முடியாது. மாறாக, அந்த நாட்டு அணியாலேயே தெரிவுசெய்யப்பட வேண்டும். ஜமைக்காவின் தடகள நிர்வாகச் சங்கத்தின் விதிகளின்படி, ஒலிம்பிக் போட்டிகளில் ஒருவர் பங்குபற்ற வேண்டுமாயின், தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றி, அதன்மூலமே தகுதிபெற முடியும்.
இதனால், இந்தத் தகுதிகாண் போட்டிகள், முக்கியமானவையாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago