Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்க அணிக்கெதிராகவும் பாகிஸ்தான் அணிக்கெதிராகவும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. அடுத்த பருவகாலத்தில் இப்போட்டிகள் இடம்பெறுமென அறிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்குமிடையில் கடந்தாண்டு இடம்பெற்ற உலகின் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து, பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையிலேயே, அவுஸ்திரேலியாவின் அடுத்த பருவகாலத்தின்போது (இவ்வாண்டின் இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கும்), இந்தப் போட்டிகளை நடத்த எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்திய அடிலெய்ட் மைதானம், தென்னாபிரிக்காவுக்கெதிரான போட்டியையும் பிறிஸ்பேண் மைதானம், பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் போட்டியையும் நடத்தவுள்ளது. இதுவரை வெளிவந்துள்ள தகவல்களின்படி, பாகிஸ்தானுக்கெதிரான போட்டி டிசெம்பரிலும் தென்னாபிரிக்காவுக்கெதிரான போட்டி ஜனவரியிலும் இடம்பெறவுள்ளன.
முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணியும் அவுஸ்திரேலிய அணியும் மோதியதோடு, அந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
1 hours ago