Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ் பிறீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி, இன்று இடம்பெறவுள்ளது. கொமிலா விக்டோரியன்ஸ் அணியும் பரிசால் புள்ஸ் அணியுமே இப்போட்டியில் மோதவுள்ளன.
இப்போட்டி, இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்கு மஷ்ரபி மோர்தஸா தலைமை தாங்கும் நிலையில், இலங்கையின் நுவான் குலசேகர, பாகிஸ்தானின் அஹமட் ஷெஷாத், மேற்கிந்தியத் தீவுகளின் அன்ட்ரே றசல் ஆகியோர் முக்கிய வெளிநாட்டு வீரர்களாக உள்ளனர்.
பரிசல் புள்ஸ் அணிக்கு மகமதுல்லா தலைமை தாங்கும் நிலையில், பாகிஸ்தானின் மொஹமட் சமி, மேற்கிந்தியத் தீவுகளின் கெவோன் கூப்பர், இலங்கையின் சீக்குகே பிரசன்ன ஆகியோர், முக்கிய வெளிநாட்டு வீரர்களாக உள்ளனர்.
இறுதிப் போட்டிக்கு கொமிலா விக்டோரியன்ஸ் அணி ஏற்கெனவே தகுதிபெற்றிருந்த நிலையில், இரண்டாவது அணியைத் தெரிவுசெய்வதற்கான போட்டி, ரங்பூர் றைடர்ஸ் அணியும் பரிசல் புள்ஸ் அணியும் திங்களிரவு மோதின.
இப்போட்டியில், ஷகிப் அல் ஹசன், திஸர பெரேரர், டெரன் சமி, லென்டில் சிமன்ஸ் ஆகியோர் அடங்கிய ரங்பூர் றைடர்ஸ் அணி 160 ஓட்டங்களைப் பெற, பரிசல் புள்ஸ் அணி, இறுதி ஓவரில் 3 பந்துகள் மீதமிருக்க வெற்றிபெற்றது.
18 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
7 hours ago