Freelancer / 2023 நவம்பர் 20 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷின் அணித்தலைவராக நஜ்முல்
ஹொஸைன் ஷன்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் இறுதியாக விளையாடிய டெஸ்ட் போட்டியான ஆப்கானிஸ்தானுக்கெதிரான
போட்டியில் பங்களாதேஷுக்குத் தலைமை தாங்கிய லிட்டன் தாஸுக்கு ஒரு மாதம் பிரசவகால
விடுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே பங்களாதேஷுக்கு ஷன்டோ தலைமை தாங்கவுள்ளார்.
இதேவேளை, விரல் முறிவடைந்தமை காரணமாக லிட்டனுக்கு முதல் அணித்தலைவராக இருந்த
ஷகிப் அல் ஹஸனும் இத்தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குழாம்: நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ (அணித்தலைவர்), மஹ்முடுல் ஹஸன் ஜோய், ஸகிர்
ஹஸன், ஷட்மன் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிக்கூர் ரஹீம், நுருல் ஹஸன் சொஹான்,
மெஹிடி ஹஸன் மிராஸ், தஜியுல் இஸ்லாம், நயீம் ஹஸன், சைட் காலிட் அஹ்மட், ஷொரிஃபுல்
இஸ்லாம், ஹஸன் மஹ்மூட், ஷடாட் ஹொஸைன் டிப்பு, ஹஸன் முராட்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago