2025 ஜூலை 19, சனிக்கிழமை

பங்களாதேஷின் புதிய தலைவராக ஷகிப்

Editorial   / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷின் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய அணித்தலைவராக ஷகிப் அல் ஹஸன் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கெதிரான தொடரிலிருந்து அணித்தலைவராக ஷகிப் அல் ஹஸன் கடமையாற்றவுள்ளார். அந்தவகையில், 2011ஆம் ஆண்டு தன்னை அணித்தலைவராக பிரதியீடு செய்த முஷ்பிக்கூர் ரஹீமை தற்போது ஷகிப் அல் ஹஸன் பிரதியீடு செய்கிறார்.

இலங்கையணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பங்களாதேஷுக்கு ஷகிப் அல் ஹஸன் தலைமை தாங்குவார் எனத் தெரிவித்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹஸன், எவ்வளவு காலத்துக்கு ஷகிப் அல் ஹஸன் அணித்தலைவராக இருப்பார் எனத் தெரிவிக்கவில்லை.

இதேவேளை உப அணித்தலைவராக, தமிம் இக்பாலை மஹ்முதுல்லா பிரதியீடு செய்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X