Editorial / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}


இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மிர்பூரில் நேற்று ஆரம்பித்த இரண்டாவது போட்டியின் இன்றைய முதல் நாள் ஆட்டமுடிவில் இலங்கையணி முன்ன்னிலை பெற்றுக் காணப்படுகிறது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், குசல் மென்டிஸ் 68, றொஷேன் சில்வா 56, டில்ருவான் பெரேரா 31, அகில தனஞ்சய 20 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அப்துர் ரஸாக், தைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் முஸ்தபிசூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவருகின்ற பங்களாதேஷ், இன்றைய முதல்நாள் ஆட்டமுடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 56 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், லிட்டன் தாஸ் 24, மெஹெடி ஹஸன் மிராஸ் ஐந்து ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமுள்ளனர். பந்துவீச்சில், சுரங்க லக்மால் 2 விக்கெட்டுகளையும் டில்ருவான் பெரேரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago