2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பங்களாதேஷுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 08 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் பாகிஸ்தான் காணப்படுகின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், டாக்காவில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த மழையால் இரண்டரை நாள்கள் அளவில் இழக்கப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், அணித்தலைவர் பாபர் அஸாமின் 76, அஸார் அலியின் 56, மொஹமட் றிஸ்வானின் ஆட்டமிழக்காத 53, பவாட் அலாமின் ஆட்டமிழக்காத 50, அபிட் அலியின் 39, அப்துல்லா ஷஃபிக்கின் 25 ஓட்டங்களோடு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 300 ஓட்டங்களைப் பெற்றபோது தமது இனிங்ஸை இடைநிறுத்தியது. பந்துவீச்சில், தஜியுல் இஸ்லாம் 2, எபொடொட் ஹொஸைன் 1, காலிட் அஹ்மட் 1 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ், சஜிட் கானிடம் 6 விக்கெட்டுகளை வரிசையாகப் பறிகொடுத்து நேற்றைய நான்காம் நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 76 ஓட்டங்களையே பெற்றுத் தடுமாறி வருகிறது. களத்தில், ஷகிப் அல் ஹஸன் 23, தஜியுல் இஸ்லாம் ஓட்டமெதையும் பெறாமல் ஆட்டமிழக்காமல் உள்ளனர். நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X