Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியானது, டாக்காவில் நாளை காலை ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கின்றது.
முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அபாரமாக வெற்றி பெற்ற நிலையில், தொடரைச் சமப்படுத்துவதற்கு இப்போட்டியை கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் பங்களாதேஷ் காணப்படுகின்றது.
அதுவும் தமது சிரேஷ்ட வீரர் ஷகிப் அல் ஹஸன், ஆரம்பத்துடுப்பாட்டவீரர் ஷட்மன் இஸ்லாம் இல்லாமல் இப்போட்டியை பங்களாதேஷ் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அந்தவகையில், ஷகில் அல் ஹஸனுக்குப் பதிலாக குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்ட செளமியா சர்க்கார் ஆரம்பத்துடுப்பாட்டவீரராக களமிறங்குவதோடு, ஷகிப் அல் ஹஸனுக்குப் பதிலாக அபு ஜயேட் களமிறங்கக் கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
மறுபக்கமாக, இப்போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்தாலே தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றலாமென்ற நிலையில், முதலாவது போட்டியில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த அதேயணியே இப்போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
2 hours ago