Shanmugan Murugavel / 2025 மே 20 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஷார்ஜாவில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பங்களாதேஷ், தன்ஸிட் ஹஸனின் 59 (33), தெளஹிட் ஹிரிடோயின் 45 (24), அணித்தலைவர் லிட்டன் தாஸின் 40 (32), நஜ்முல் ஹொஸைன் ஷன்டோவின் 27 (19), ஜாகிர் அலியின் 18 (06) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் சஹிர் கான் 4-0-36-2, ஹைதர் அலி 4-0-31-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தார்.
பதிலுக்கு 206 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஐ.அ. அமீரகம், அணித்தலைவர் முஹமட் வஸீமின் 82 (42), முஹமட் ஸொஹைப்பின் 38 (34), ஆசிஃப் கானின் 19 (12), ஹைதர் அலியின் ஆட்டமிழக்காத 15 (06), அலிஷான் ஷரஃபுவின் 13 (09), துருவ் பரஷாரின் 11 (07) ஓட்டங்களோடு 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கையடைந்து பங்களாதேஷுக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி வெற்றியை பதிவு செய்து கொண்டது.
இப்போட்டியின் நாயகனாக வஸீம் தெரிவானார்.
39 minute ago
8 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
8 hours ago
27 Mar 2026