2025 ஜூலை 24, வியாழக்கிழமை

பங்களாதேஷைத் தோற்கடித்த தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2022 ஒக்டோபர் 27 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், சிட்னியில் இன்று நடைபெற்ற பங்களாதேஷுடனான குழு இரண்டு சுப்பர் – 12 போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் தெம்பா பவுமா, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, ஆரம்பத்திலேயே தஸ்கின் அஹ்மட்டிடம் பவுமாவை இழந்தது. எனினும், றைலி றொஸோவின் 109 (56), குயின்டன் டி கொக்கின் 63 (58) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், முஸ்தபிசூர் ரஹ்மான் 4-0-25-0 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.

பதிலுக்கு 206 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், ஆரம்பத்திலிருந்தே அன்றிச் நொர்கியா (4), ககிஸோ றபாடா, தப்ரையாஸ் ஷம்சி (3), கேஷவ் மஹராஜ்ஜிடம் வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 16.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களையே பெற்று 104 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக றொஸோ தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .