2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

பதவி விலகிய கரி ஸ்டெட்

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 08 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


நியூசிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ள கரி ஸ்டெட், டெஸ்ட் அணியை வழிநடத்துவதற்கு மீள விண்ணப்பிக்க விரும்புவதாவென எதிர்வரும் வாரங்களில் தீர்மானிக்கவுள்ளார்.

டெஸ்ட், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு வெவ்வேறான தலைமைப் பயிற்சியாளர்களை நியூசிலாந்து கிரிக்கெட் சபை கருத்திற் கொள்கிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்தின் பயிற்றுவிப்பாளராக ஸ்டெட் இருக்கின்ற நிலையில், அவரது ஒப்பந்தமானது எதிர்வரும் ஜூன் மாதத்துடன் காலாவதியாகின்றது.
தென்னாபிரிக்காவின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான முன்னாள் பயிற்சியாளர் றொப் வோல்டர் நியூசிலாந்தின் பயிற்றுவிப்பாளராகப் போகின்றாரென தகவல்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் 2019 உலகக் கிண்ண, 2021 இருபதுக்கு - 20 உலகக் கிண்ண, 2025 சம்பியன் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிகளுக்கு நியூசிலாந்தை ஸ்டெட் அழைத்துச் சென்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X